அனர்த்த நிவாரணப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு முறையாக முகாமை செய்யப்படல் வேண்டும்

0
174

(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)

Maseehudeen inamullahநாட்டில் சுமார் நான்கு இலட்சம் பேர் சீரற்ற காலநிலை, வெள்ளம் ,மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குறிப்பாக கேகாலை அரணாயக பகுதியில் இடம்பெற்ற மண்சரிவினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், வதிவிடங்களை இழந்தும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் ஆயிரக்கணக்கில் வீடுகள் நீரில் மூழ்கியும் மக்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை நாம் அறிந்த விடயமாகும்.

அரசாங்கமும், பொதுமக்களும், தன்னார்வ தொண்டர் நிறுவனங்களும் ஆரம்பகட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற பொழுதும் பதிக்கப்பட்ட சகலரும் இயல்பு வாழக்கைக்கு திரும்பும் வரையிலான அனர்த்த நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கப்பட்ட முறையான முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு வருவது அவசியமாகும்.

பல்வேறு தரப்புக்களும் ஒன்றிணைந்து நிவாரணப் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளும் பொழுது மாத்திரமே எதிர்பார்கின்ற அடைவுகளை எம்மால் எட்ட முடியும் இன்ஷா அல்லாஹ்.

பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விபரங்களை திரட்டுதல், சேத விபரங்களை கண்டறிதல், சேதமடைந்துள்ள ஆதன,ஆவண விபரங்களை கிடைக்கப் பெறுகின்ற உளர் உணவுப் பொருட்களை, களஞ்சியப் படுத்துதல், சேகரிக்கப்படுகின்ற நிதியுதவிகளை திட்டமிட்ட அடிப்படயில் பொறுப்புக்கூறல் மற்றும், வெளிப்படைத்த் தன்மை பேணி நிர்வகித்தல் போன்ற பிரதான அம்சங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

அதேபோன்றே தொண்டர் ஆளணிகளை திட்டமிட்டு களப்பணிகளில் ஈடுபடுத்தல், வைத்திய முகாம்களை, நடமாடும் மருத்துவ சேவைகளை நடாத்துதல், குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவர்களின் தேவைகளை கண்டறிதல், வெள்ள நீர் வடிந்ததன் பின்னர் சுற்றுச் சூழல் சுகாதார நிலவரங்களை கண்டறிந்து துப்பரவுப் பணிகளில் ஈடுபடுதல் போன்ற இன்னோரன்ன பணிகளை ஒருங்கிணைக்கப்பட்ட பொறிமுறை ஒன்றின் கீழ் நாம் செய்வதே முறையான அனர்த்த முகாமையாகும்.

மேற்படி சகல விவகாரங்களிலும் அரச இயந்திரங்கள்,அனர்த்த முகாமை மத்திய நிலையம், பாதுகாப்பு படைகள், காவல்துறையினர், மக்கள் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், அரச வைத்தியசாலைகள், மருத்துவர்கள், உள்நாட்டு வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்கள் போன்றவற்றின் சேவைகளை பாரபட்சமின்றி பெற்றுக் கொள்வதற்கான நிர்வாக தொடர்பாடல் அதிகாரிகளின் சேவைகளை நாம் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

இறுதியாக நாம் மேற் கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட பணிகள், பெற்றுக் கொண்ட அனுபவங்கள், கற்றுக் கொண்ட பாடங்கள், திரட்டிய தகவல்கள் தரவுகள், கணக்கு வழக்கு விபரங்கள் சகலவற்றையும் ஒரு அறிக்கையாக தயாரிப்பது எமது எதிர்கால செயற்பாடுகளிற்கு பயனுள்ளதாக இருக்கும், இன்ஷாஅல்லாஹ்.

இவ்வாறான நெறிப்படுத்தப்பட்ட மனித நேய அனர்த்த முகாமை பொறிமுறை இல்லாமை கடந்த காலங்களில் உணரப்பட்டு வந்தமையினால் தேசிய ஷூரா சபை தனது உறுப்பு அமைப்புக்களையும் ஏனைய தன்னார்வ தொண்டர் நிறுவனங்களையும் இணைத்து கடந்த காலங்களில் விரிவான திட்டமிடல்களை மேற்கொண்டிருந்தது.

இன்ஷா அல்லாஹ், நாளை கொழும்பில் தற்காலிக மத்திய ஒருங்கிணைப்பு தளத்தை ஸ்தாபித்துக் கொள்வதற்கும், அடுத்தடுத்த கட்ட பணிகளை வரையறுத்து முகாமை செய்வதற்கும் மேற்படி சகல தரப்புக்களிற்கும் அழைப்பின விடுத்துள்ளது. அந்த முயற்சி வெற்றிபெற எங்களால் இயன்ற அனைத்து ஒத்துழைப்புக்களையும் நாம் பொறுப்புணர்வுடன் வழங்க முன்வரல் வேண்டும்.

LEAVE A REPLY