பாரிஸ் நகரில் இருந்து கெய்ரோ சென்ற எகிப்து விமானம் கிரேக்க நாட்டு தீவில் விழுந்து நொறுங்கியது

0
166

201605191431056956_EgyptAir-plane-crashed-off-Greek-island-of-Karpathos_SECVPFபிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோ நோக்கி 66 பேருடன் சென்ற பயணிகள் விமானம் கிரேக்க நாட்டின் கர்பதோஸ் தீவில் விழுந்து நொறுங்கியது.

எகிப்து ஏர் நிறுவனத்தின் தடம் எண்: MS804 கொண்ட ஏர்பஸ் பயணிகள் விமானம் கெய்ரோவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கிச் சென்றபோது உள்ளூர் நேரப்படி இரவு 11.09 மணியளவில் விமான நிலைய ரேடாரின் கண்காணிப்பு எல்லையில் இருந்து மாயமானதாக தெரியவந்தது.

இதுதொடர்பான, தேடுதல் வேட்டையில் எகிப்து நாட்டின் வான்வெளியில் ஏற்பட்ட கோளாறின் விளைவாக கிரேக்க நாட்டின் கர்பதோஸ் தீவில் விழுந்து நொறுங்கியது. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்னவானது என்ற பதற்றம் எழுந்துள்ள நிலையில் சம்பவ இடத்துக்கு மீட்பு மற்றும் நிவாரணப்படை குழுவினர் அங்கு விரைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் 30 எகிப்தியர்கள், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 15 பேர், ஈராக் நாட்டை சேர்ந்த இருவர், இங்கிலாந்து, பெல்ஜியம், குவைத், சவுதி அரேபியா, சூடான், சாட், போர்ச்சுகல், அல்ஜிரியா மற்றும் கனடா நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என 56 பயணிகளும், 10 விமான பணியாளர்களும் இருந்த்தாக தெரியவந்துள்ளது.

சுமார் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது அந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு என்ன? என்பது தொடர்பான விபரங்களை அறிய கருப்புப் பெட்டியை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY