பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உதவ காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாடு

0
172

(எம்.ஐ.அப்துல் நஸார்)

KMF Logoஅசாதாரண காலநிலை காணமாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஊடகவியலாளர்களுக்கு உதவ காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் தமது இருப்பிடங்களை இழைந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களுக்கு தற்காலிகமாகவேனும் உதவும் முகமாக உலருணவுப் பொருட்களை வழங்குவதற்கு காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்த உதவிகள் இன, மத பேதங்களுக்கு அப்பால் மனித நேய அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த மகத்தன மனிதநேயப் பணியில் தம்மையும் இணைத்துக்கொள்ள விரும்புவர்கள் தமது உதவிகளை வழங்குவதற்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு (22) முன்னதாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்

தலைவர்:  ஏ.எல்.டீன் பைருஸ் 0774581738
செயலாளர்:  எம்.எச்.எம்.அன்வர் 0777397662
பொருளாளர்:  எஸ்.ஏ.கே.பழீலுர்ரஹ்மான் 0773235246

LEAVE A REPLY