எருமை மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளான வேன்: வெலிகந்தையில் சம்பவம்

0
120

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு வழியாக கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று நேற்று 18 புதன்கிழமை இரவு சுமார் 11.00 மணியளவில் விபத்துக்குள்ளானது.

மேற்படி விபத்துச் சம்பவம் பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை எல்லைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து வேன் சாரதியின் கவனயீனம் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும், வேனில் பயணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் வெலிகந்த பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவினர் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த விபத்தில் இரண்டு எருமை மாடுகள் காயமடைந்துள்ளதோடு வேனின் முன் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாக வெலிகந்த பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவினர் மேலும் தெரவித்தனர்.

விபத்து தொடர்பான் மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

5c8689e4-c851-4253-b7b6-4e441719490e

7eb99f7f-a056-43fc-a412-54bd01dc8749

818c35ea-8444-4c0f-9443-fe1bcbb9eaae

LEAVE A REPLY