Batticaloa campus இலங்கை முதலீட்டு சபையினுடைய நிறுவனமாக அங்கிகரிப்பு உடன்படிக்கை இன்று கைச்சாத்து

0
233

ecf6c836-35ac-4f06-b1ef-019da918e9faரிதிதென்னெயில் ஆரம்பிக்கப்பட்டுள்ள Batticaloa campus நிறுவனத்தை இலங்கை முதலீட்டு சபை (BOI) நிறுவனத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக இன்று அங்கீகரித்துள்ளது. இதன் பிரகாரம் இன்று BOI நிறுவனத்திற்கும் Batticaloa campusகுமிடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.Batticaloa campus 3000 மாணவர்களைக் கொண்டு எதிர்காலத்திலே 16 பீடங்களையும் கொண்டு நிர்மாணிக்கப்படவிருக்கின்றது. அதற்கான கட்டட வேலைகள் இப்பொழுது மட்டக்களப்பின் எல்லைக் கிராமமான புனானை ஜயந்தியாய கிராமத்தில் கட்டப்பட்டு வருகிறது.

எனவே மகாவலி அதிகார சபையினால் Batticaloa campus க்கும் சிறீலங்கா ஹிறா பௌண்டேஸனுக்குமிடையே வழங்கப்பட்டுள்ள 100 ஏக்கர் காணியில் Batticaloa campus கட்டப்பட்டு வருகின்றது.

எதிர்வருகின்ற 2017 ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள Batticaloa campus ஐ இலங்கை முதலீட்டு சபை தனது சபையின் கீழ் அங்கீகரித்துள்ளது. அதற்கான உடன்படிக்கை இலங்கை முதலீட்டு சபையின் தலைமைக் காரியாலயமான கொழும்பு உலக வர்த்தக மையத்தின் 25 வது மாடியில் கைச்சாத்திடப்பட்டது.இலங்கை முதலீட்டு சபையின் அதன் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, Batticaloa campus ன் தலைவர் இராஜாங்க அமைச்சர் M.L.A.M.ஹிஸ்புல்லாஹ், Batticaloa campus ன் முகாமைத்துவப்பணிப்பாளர் அஹமட் ஹிறாஸ் ஹிஸ்புல்லாஹ், இன்று இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்கள்.

இதன் பிரகாரம் Batticaloa campus தனது சேவைகளை மிகச் சிறப்பாக வழங்கும்.வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு பேராசியர்களை இங்கு கொண்டு வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதோடு வெளிநாட்டு முதலீடுகளை தாரளமாக எந்த விதமான வரியுமில்லாமல் கொண்டு வருவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று இந்த பல்கலைக்கழகத்தை கட்டி எழுப்புவதற்குத் தேவையான சகல தளபாடங்கள் மற்றும் உபகரணங்களையும் எந்த விதமான வரியுமில்லாமல் நேரடியாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கும், அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதே போன்று இந் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்களுக்கு அரசாங்கத்திற்கு எந்த வித வரியும் வழங்க வேண்டியதில்லை. இவ்வாறான சலுகைகளை இந்த உடன்படிக்கை மூலம் பெறப்பட்டுள்ளது. எனவே Batticaloa campus வரலாற்றில் முக்கிய அம்சம் என்றும் அதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றி செலுத்துகின்றோம் என்றும் Batticaloa campus ன் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான M.L.A.M. ஹிஸ்புல்லாஹ்  குறிப்பிட்டார்.

5b135989-38ed-48ef-99e2-862e9caee631

b78b481d-5feb-4b13-9970-750ec855a5e4

ecf6c836-35ac-4f06-b1ef-019da918e9fa

LEAVE A REPLY