அவுஸ்­தி­ரே­லி­யாவில் பள்­ளி­வாசல் தீக்­கிரை

0
117

345082F500000578-3595684-image-a-4_1463525677266அவுஸ்­தி­ரே­லிய மெல்போர்ன் நகரின் தென்­மேற்கே கீலோங் எனும் இடத்­தி­லுள்ள பள்­ளி­வா­ச­லொன்று நேற்றுப் புதன்கிழமை தீயால் அழி­வ­டைந்­துள்­ளது.

மேற்­படி சம்­ப­வத்தை திட்­ட­மிட்ட குற்­றச்­செ­ய­லாக சந்­தே­கிக்கும் பிராந்­திய பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

பொஸ்டொக் அவன்­யு­வி­லுள்ள அந்தப் பள்­ளி­வா­சலில் பர­விய தீயை 7 தீய­ணைப்புப் படை­வீரர்கள் நேற்று புதன்­கி­ழமை அதி­காலை 2.15 மணி­ய­ளவில் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்­ப­வத்தில் எவரும் காய­ம­டை­ய­வில்லை.

கிரேட்டர் கீலோங் பிராந்­தி­யத்தில் வசிக்கும் 8,000 க்கு மேற்­பட்ட முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாக இந்தப் பள்ளிவாசல் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY