அரநாயக்க மண்சரிவில் காணாமல்போனோரை தேடும் பணி இடைநிறுத்தம்

0
126

CitiIsNWkAAfVG_அரநாயக்க பகுதிகளில் மண்சரிவினால் காணாமல்போனோரை தேடும் பணி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அங்கு மீண்டும் ஏற்பட்ட தொடர் மழையின் காரணமாக மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியிலிருந்து மீட்புப்படையினர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

அரநாயக்கவில் இடம்பெற்ற மண்சரிவில் உயிரிழந்த 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது.

இதேவேளை, நாடு முழுவதும் நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் 22 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 41 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-VK-

LEAVE A REPLY