தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா தெரிவானதையிட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவிப்பு

0
147

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Naseer Hafisதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

கடந்த 16-ம் திகதி திங்கட்கிழமை தமிழகத்தில் இடம்பெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் ஜெயலலிதா வெற்றிவாகை சூடியுள்ளார்.

வெளியாகிக் கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின்படி அதிமுக அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகின்றது.

இதையடுத்து தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை தான் நிறைவேற்றுவதற்கு உறுதி பூண்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதிப்படுத்தியிருப்பதையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் வரவேற்றுள்ளார்.

LEAVE A REPLY