இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மூன்றாம் கட்ட இலவச உம்றா குழு மக்கா பயணம்

0
214

(எம்.ரி.எம்.யூனுஸ்)

FB_IMG_1463643608092-1024x683சிறீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் பள்ளிவாயல்களில் கடமை புரியும் 500 இமாம்கள் மற்றும் முஅத்தீன்களை இலவசமாக உம்றாவுக்கு அனுப்பும் திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டக் குழு இன்று (19) வியாழக்கிழமை புனித மக்கமா நகர் நோக்கி பயணமாகினர். இவர்களை வழியனுப்பும் வைபவம் கொழும்பு பண்டார் நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றது.

இதன் போது மீள் குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி அமைச்சின் உயர் அதிகாரிகள் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புழ்ழாஹ் ஹிரா பெளன்டேசன் உயர்பீட உறுப்பினர்கள் கலந்து கொண்டு வழியனுப்பி வைத்தனர்.

சிறிலங்கா ஹிறாபவுண்டேசன் நிறுவனத்தின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பேரில் சஊதி அரேபிய தனவந்தர்களின் உதவியுடன் சிறிலங்கா ஹிறாபவுண்டேசன் நிறுவனம் மேற்கொண்டு வரும் இந்த இலவச உம்றா திட்டத்தின் கீழ் 500 இமாம்கள் மற்றும் முஅத்தீன்கள் உம்றாவுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் 200 பேர் உம்றாவுக்கு சென்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

FB_IMG_1463643604752-1024x683 FB_IMG_1463643625454-1024x683 FB_IMG_1463643630149-1024x683

LEAVE A REPLY