கண்டியில் 16 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம்

0
167

School Closedகண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையையடுத்து 16 பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்தார்.

கண்டி நகரில் ஏழு பாடசாலைகளும் வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள மடுல்கலைப் பிரதேசத்தில் 9 பாடசாலைகளும் இவ்வாறு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கண்டி நகரில் அமைந்துள்ள டி.எஸ். சேனாநாயக்க மகா வித்தியாலயம், மகாமாயா மகளிர் கல்லூரி, புஷ்பதான மகளிர் கல்லூரி, தர்மராஜ கல்லூரி, கோத்தமி மகளிர் கல்லூரி, சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர மகா வித்தியாலயம், வித்தியார்த்த ஆரம்ப பாடசாலை, வத்துகாமம், கெலேபொக்க அபிராமி தமிழ் வித்தியாலயம், பரமேஷ்வரா தமிழ் வித்தியாலம், மாவுஸ்ஸா தமிழ் வித்தியாலயம், கோமரை தமிழ் வித்தியாலயம், அலகொல்ல தமிழ் வித்தியாலயம், ஹாகலை தமிழ் வித்தியாலயம், கந்தகெட்டிய தமிழ் வித்தியாலயம், விபுலானந்த தமிழ் வித்தியாலயம், ஹாத்தலை தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

#Virakesari

LEAVE A REPLY