இயற்கை இடரில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவது மனிதாபிமானக் கடமை: ஏ.சி.எம். ஷயீட்

0
398

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

965c822c-29a3-4751-bd50-dff41bcbdc5eநாட்டில் தற்போதைய சீரற்ற காலநிலையின் விளைவாக ஏற்பட்டுள்ள இயற்கை இடரினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவது மனிதாபிமானக் கடமை என ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் வியாழக்கிழமை 19.05.2015 விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்மிய்யத்துல் உலமா சபை மற்றும் சமூக நிறுவனங்களும் இணைந்து பொருளாகவோ பணமாகவோ நிவாரணங்களைச் சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களிடம் சேர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை இடர்கள் ஏற்படுகின்றபோது தற்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுப்போயுள்ள மலையகம் உட்பட நாட்டின் இதர பிரதேசங்களில் வாழும் மக்கள் ஓடிடோடி வந்து மட்டக்களப்பு மக்களுக்கு உதவிக் கரம் நீட்டியிருந்தார்கள். அத்தகைய மக்கள் தற்போது பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் அவர்களுக்கு உதவுல் நமது மனிதாபிமானக் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேகரிப்பு வெள்ளிக்கிழமை தொடக்கம் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY