மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் ஜெயா

0
131

jeyalalitha-won-tamil-nadu-electionஇந்தியாவின், தமிழ்நாட்டில் கடந்த மே 16ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலின் முடிவுகள் தற்போது (19) வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அதன் அடிப்படையில் ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க. பெரும்பான்மை ஆசனங்களை பெற்று முன்னிலையில் இருக்கின்றது.

இது வரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்கள்

அ.இ.அ.தி.மு.க. – 135 (ஜெயலலிதா)
தி.மு.க. – 93 (கருணாநிதி)
பா.ம.க. – 05 (அன்புமணி)
பா.ஜ.க. – 02 (தமிழிசை செளந்தரராஜன்)

234 ஆசனங்களைக் கொண்ட தமிழ்நாட்டின் பாராளுமன்றத் தேர்தலில், 118 ஆசனங்களைப் பெறுவதன் மூலம் பெரும்பான்மை பலத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தற்போது தமிழ்நாட்டின் முதல்வரான ஜெயலலிதா மீண்டும் இரண்டாவது முறை தொடர்ச்சியாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முதல்வர் ஜெயலலிதாவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதாக அவரது உத்தியோகபூர்வ டுவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவின் பல்வேறு செய்திச் சேவை நிறுவனங்கள் நடாத்திய கருத்துக் கணிப்பில், கருணாநிதி தலைமையிலான தி.மு.க., பெரும்பான்மை பலத்தை பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY