வெள்ளம் மற்றும் மண்சரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடுவோம் காத்தான்குடி சம்மேளனம் வேண்டுகோள்

0
140

federation-logo1வெள்ளம் மற்றும் மண்சரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிட காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் முன்வந்துள்ளது. அது தொடர்பான அறிவித்தலை எமது வாசகர்களுக்கு தெரியப்படுத்துமாறு எமக்கு அனுப்பியுள்ளார்கள்.

அன்புப் பொதுமக்களுக்கு, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

அன்புடையீர், السلام عليكم ورحمة الله وبركاته

தற்போது நமது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அதிகளவான பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கி தங்களது வீடுகளை விட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதை நாம் அறிவோம்.

2011 ம் ஆண்டு நமது பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ள அணர்த்தத்தின் போது தற்போது பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் நமக்கு அதிகளவான நிவாரண உதவிகள் செய்ததை நாம் மறக்க முடியாது.

அதனடிப்படையில் நமது பிரதேசம் தழுவியதாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெள்ள அனர்த்த நிவாரன நிதி வசூல் ஒன்றினை மேற்கொள்வதற்கு சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

எனவே, வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகைக்கு வருபவர்கள் ஆகக் குறைந்தது 100 ரூபாவினை வழங்கி இந்நிவாரண வேலைத்திட்டத்திற்கு பூரன ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

جزاك الله خيرا
பிரதித் தலைவர், செயலாளர்
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி

LEAVE A REPLY