கார் விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணிக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை

0
83

CiocMQmUgAAhZY4அமெரிக்காவில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தைச் சேர்ந்த சாரா இலர் – மிட்ரைடர் தம்பதி கடந்த புதன்கிழமை மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்த போது டிராக்டருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் கர்ப்பிணியான சாரா இலரும் அவரது கணவரும் பாரிய காயங்களுக்கு உள்ளாகினர். இதன்போது, பொலிஸார் விபத்து நேர்ந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

சாரா இலரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவர்கள் அந்தப் பெண்ணை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுத்தனர்.

இதன்போது அவருக்கு 2 கிலோ எடையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை வெண்டிலேட்டரில் பாதுகாத்து வருகின்றனர்.

ஒக்சிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
ஆனாலும் குழந்தை நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் எலும்பு முறிவுக்கு உள்ளான மிட்ரைடர், மேலதிக சிகிச்சைக்காக செயிண்ட் லூயிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY