பந்து ஹெல்மட்டை தாக்கியதால் அதிர்ச்சி: பெய்லி

0
140

201605181452102722_Pune-player-hitting-the-ball-Hellman-Bailey-was-shocked_SECVPFடெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பந்து ஹெல்மட்டை தாக்கியதால் புனே வீரர் பெய்லி அதிர்ச்சி அடைந்தார்.

நேற்றைய போட்டியில் நாதன் கோல்ட்டர் வீசிய பந்தை பெய்லி அடிக்க முயன்றார் ஆனால் அது தவறி ஹெல்மட்டை கடுமையாக தாக்கியது. உடனே ஹெல்மெட் ஸ்டம்பு அருகே கீழே விழுந்தது. நல்ல வேளையாக பெய்லிக்கு காயம் எதுவும் ஏற்பட வில்லை. இது குறித்து அவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

நான் டெலிவிஷன் ரீபிளேயில் பார்த்த போது தான் எனக்கு தெளிவாக தெரிந்தது. பந்து ஹெல்மட்டை தாக்கியதும் நான் நிலை குலைந்து அதிர்ச்சியாகி விட்டேன். லாரி மோதியது போன்று உணர்ந்தேன். உடனடியாக அதில் இருந்து மீண்டு, சகஜ நிலைக்கு திரும்பினேன். வேறு ஹெல்மட்டை வாங்கி ஆடினேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY