பிர்தெளஸ் நகர் வீதி புனரமைக்கப்படாமையால் பிரதேச மக்கள் விசனம்.

0
123

(எம்.ரி.எம்.யூனுஸ்)

புதிய காத்தான்குடி 02, பிர்தெளஸ் நகர் பிர்தெளஸ் பாடசாலைக்கு அருகிலுள்ள குறுக்கு வீதி நீண்ட காலமாக செப்பனிடப்படாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மழைக்காலங்களில் நீர் வீதியை ஆக்கிரமித்து காணப்படுவதால் பிரதேசவாசிகள் வேற்று வீதியையே பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுவதாகவும் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்குவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசத்தில் பிர்தெளஸ் பாடசாலை மற்றும் பிர்தெளஸ் பள்ளிவாயல் என்பன அமைந்துள்ளதால் பாடசாலைக்கு செல்லும் சிறார்கள் பாதசாரிகள் மழைக்காலங்களில் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் இப்பிரதேசத்திற்கு வருகை தரும் அரசியல்வாதிகள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியும் இதுவரை பாதை செப்பனிடப்படாமல் இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த பிர்தெளஸ் பாடசாலைக்கு அருகிலுள்ள குறுக்கு வீதியை புனரமைத்து தருமாறு நகரசபை வரியிருப்பாளர்கள் நகரசபையை அல்லது பிரதேச அரசியல்வாதிகளை வேண்டி நிற்கின்றனர்.

1bc86f01-f1e2-4239-a18c-13299b59faad

53a8898e-bed9-4ffb-a55b-580404b99ae0

22990e35-5a70-417f-9c00-bcea3aac4ccb

a4d27feb-e719-40f9-b31b-22d8f226cd97

b655cf18-173b-4b2e-b567-60809c71820c

c1ad5d9d-f437-4f3c-98d3-409ce713d0a7

d61e3662-672e-464c-b02b-20ab574a55ed

LEAVE A REPLY