மதியன்பனின் “வலிக்கிறது வாங்களேன் உம்மா..”கவிதை நூல் மலேசியாவில் வெளியீடு

0
201

(பைஸர் அமான்)

edc1aa2f-2fff-41ee-bcc2-866d09b9a099காத்தான்குடியைச் சேர்ந்தகவிஞரும், எழுத்தாளருமான மதியன்பன் மஜீத் எழுதிய “வலிக்கிறது வாங்களேன்”  உம்மாஎனும் கவிதை நூல் எதிர் வரும் 21.05.2016 அன்று மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வெளியிட்டு  வைக்கப்படவுள்ளது.

இந்த வெளியீட்டு நிகழ்வின்போது கவிஞரின் மற்றுமொரு நூலான“ ஆனாலும் திமிரு தான் அவளுக்கு” எனும் நூலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இலங்கை,  இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் இலக்கிய மாநாடு ஒன்றிலேயே இந்த நூல் வெளியிடப்படவுள்ளது.

இனியநந்தவனம் பதிப்பகம், முகவரி அறவாரியம் அமைப்பு, தடாகம் இலக்கிய அமைப்பு ஆகியன இணைந்து இந்த மாபெரும் இலக்கிய நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து 30க்கும் மேற்பட்டஎழுத்தளர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தடாகம் இலக்கிய அமைப்பு மேற் கொண்டுள்ளது. இந்தமாநாட்டில் இடம்பெறவுள்ள ஆய்வரங்கத்தில் இலங்கை சார்பாக கலைமகள் ஹிதாயாவின் ஆய்வுக்கட்டுரையும் அதேபோல் கவியரங்கில் இலங்கைக் கவிஞர்களான கவிச்சுடர் ரீ.எல். ஜவ்பர்கான், பாவரசு பதியதளாவ பாறூக், கவிஞர் மதியன்பன் ஆகியோரின் கவிதைகளும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY