காத்தநகரின் காவலன் உலமாக்களை உருவாக்கிய உத்தமனுக்கு மகத்தான விழா

0
211

(ஏ.எல்.டீன் பைரூஸ்)

965b3410-0672-450d-8074-d1e761bf3eedகாத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய ஷைகுல் பலாஹ் எம்.ஏ.அப்துல்லாஹ் (றஹ்மானி) யின் கௌரவிப்பு நிகழ்வு மற்றும் “ஷைகுல் பலாஹ் சரிதை” நூல் வெளியீட்டு விழா தொடர்பான ஊடகவியாலர்கள் சந்திப்பு (17.05.2016 செவ்வாய்) நேற்று காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியில் நடை பெற்றது.

மேற்படி ஊடகவியாலர்கள் சந்திப்பில் ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் செயலாளர் கவிமணி மௌலவி எம்.எச்.எம்.புஹாரி(பலாஹி) மஜ்லிசுல் பலாஹிய்யீன் உப தலைவர் மௌலவி எம்.முபாறக் (பலாஹி), செயலாளர் மௌலவி எம்.ஜ.எம்.முஸ்தகீம் (பலாஹி) மௌலவி எம்.பீ.எம்.பாஹிம் (பலாஹி) உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஷைகுல் பலாஹ் அவர்களை பாராட்டி கௌரவிக்கின்ற நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (20.05.2016 வெள்ளிக்கிழமை பி.ப.6.45 மணி) காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காத்தான்குடி மண்ணில்தான் தான் மரணிக்க வேண்டும் என்ற ஆசையோடு அல்லலாஹ்வின் திருப்தியை மாத்திரம் இலக்காக கொண்டு இறை பணியாற்றி வாழ்ந்து வரும் சங்கைக்குரிய ஷைகுல் பலாஹ் எம்.ஏ.அப்துல்லாஹ்(றஹ்மானி) யின் வாழ்க்கை வரலாற்றினை கொண்ட நூல் ஒன்றினை வெளியிட வேண்டும் என்ற அவா பலருக்கும் பல ஆண்டுகளாக இருந்தாலும் அது இப்போதுதான் சாத்தியமாகி உள்ளதாக காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் செயலாளர் கவிமணி மௌலவி எம்.எச்.எம்.புஹாரி(பலாஹி) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஷைகுல் பலாஹ் அவர்கள் 1959 ஆண்டிலிருந்து காத்தான்குடியிலிருந்து பணியாற்றி வருகின்றார்கள். அவர்களின் மாணவர்களாக 400 க்கும் மேற்பட்ட உலமாக்கள், 300 க்கும் மேற்பட்ட ஹாபிழ்கள் பட்டம் பெற்று பல நாடுகளிலும் இமாம்களாக, அதிபர்களாக, உஸ்தாது மார்களாக பணியாற்றி வருகின்றார்கள்.

ஷைகுல் பலாஹ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுத்துக்களால் எழுத முடியாது அப்படி ஒரு எழுமையான வாழ்க்கையினை உடைய மிகப்பெரிய மனிதர்தான் ஷைகுல் பலாஹ் எம்.ஏ.அப்துல்லாஹ்(றஹ்மானி).

அப்படிப்பட்ட உத்தம மகனை பாராட்டுவது, கௌரவிப்பது என்பது காத்தான்குடி வாழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் பாக்கியமாகும் என்று தெரிவித்தார்.

மேற்படி விழா தொடர்பான பல ஏற்பாடுகளையும் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் பழைய மாணவர்கள் மஜ்லிஸ். மஜ்லிசுல் பலாஹிய்யீனகள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேற்படி விழா தொடர்பில் எந்தவித நிதி வசூள்கள், எதுவுமின்றி மஜ்லிசுல் பலாஹிய்யீன் உறுப்பினர்களின் முழுமையான பங்களிப்புடன்தான் இடம் பெறவுள்ளதாக இதன் போது தெரிவித்தனர்.

மேற்படி நிகழ்விற்கு இலங்கை, இந்தியாவிலிருந்து பல விசேட, சிறப்பு அதிதிகள், உலமாக்கள், புத்தி ஜீவிகள், கல்வி மான்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ள இருப்பதுடன் “ஷைகுல் பலாஹ் சரிதை” என்ற நூல் 3000 அச்சிடப்பட்டுள்ளதாகவும் இந்த நூல்கள் யாவும் இலவசமாகவே வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

காத்தநகரின் காவலனாக இருந்து பணி செய்தது மாத்திரமின்றி பல நூற்றுக்கணக்கான உலமாக்களை, ஹாபிழ்களை உருவாக்கிய உத்தமனுக்காக எடுக்கப்படுகின்ற இம்மகத்தான விழாவினில் அன்பு பொது மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக்குழுவினர்.

965b3410-0672-450d-8074-d1e761bf3eed

3128eb80-8a3a-4ba5-8429-fb5aad8b94d6

e1bb95c9-d52a-4216-a6be-4c6891d05f70

e3ee4214-6684-4abd-b1dc-afc4e6744a08

LEAVE A REPLY