சவூதி அரேபியாவுக்கு எதிரான சட்டமூலம் அமெரிக்க செனட்டில் நிறைவேற்றம்

0
155

150130073917_911_attack_624x351_bbc_nocreditநியூயோர்க் மற்றும் வொஷிங்டனில், கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் சவூதி அரேபியா மீது வழக்கு தொடுக்க வழிசெய்யும் சட்டமூலம் அமெரிக்க செனட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து அத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் சவூதி அரேபிய அரசு மீது வழக்கு தொடுக்க முடியும்.

எனினும் இந்த சட்டமூலம் குறித்து ஜனாதிபதி ஒபாமாவுக்கு ஆழ்ந்த கவலைகள் உள்ளன என்றும் அவர் அதில் கையெழுத்திட்டு சட்டமாக்குவார் என்பதை கற்பனை செய்துக்கூட பார்ப்பது கடினமாகவுள்ளது என்றும் வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஆதரித்தவர்களுக்கு எதிராக நீதிகோர வழிசெய்யும் சட்டமூலம் அமெரிக்க செனட்டில் குரல் வாக்கு மூலம் நிறைவேறியது.

அப்படியான சட்டம் கொண்டுவரப்பட்டால், அமெரிக்கப் பொருளாதாரத்திலிருந்து பில்லியன் கணக்கான டொலர்களை தாங்கள் திரும்பப்பெற வேண்டிய சூழல் ஏற்படும் என சௌதி அரேபியா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கு தான் ஒப்புதல் வழங்கப் போவதில்லை என அமெரிக்க ஒபாமா தெரிவித்துள்ள நிலையில், அந்தக் கருத்து நிராகரிக்கபடும் என தான் நம்புவதாக அவரது கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஒருவர் கூறுகிறார்.

செனட்டில் இந்த சட்டமூலம் நிறைவேறப்பட்ட நிலையில், இது வாக்கெடுப்புக்காக மக்களவைக்கு செல்லும்.

அந்த அவையிலும் இதற்கு இதற்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY