பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்களைக் கண்டுபிடிக்க கொட்டும் மழையிலும் தேடுதல்

0
188

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

aபாடசாலைக்குச் செல்லாமல் மறைந்து திரியும் சிறுவர்களைக் கண்டுபிடித்து சிறுவர்களுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் பாதுகாவலர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கை மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப் பிரிலுள்ள கிராமங்களில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் நேற்று (17) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையின் பயனாக அண்மைய காலங்களுக்குள்ளாக பாடசாலைக்குச் செல்லாமல் மறைந்து திரிந்த 14 சிறுவவர்களும் நீண்ட காலமாக பாடசாலைக்குச் செல்லாதிருந்த 04 மாணவர்களும் அடையாளம் காணப்பட்டதோடு அவர்களுக்கான விழிப்புணர்வும் மீண்டும் அவர்களைப் பாடசாலையில் இணைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக கிரான் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உதவியாளர் ஏ.ஆர். றுசைட் தெரிவித்தார்.

மேலும் தமது பிள்ளைகளின் பாடசாலை மீளிணைப்பு விடயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத பெற்றோர்கள் மூவர் பொலிஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இடைவிலகல் சிறுவர்களைக் கண்டு பிடித்து விழிப்புணர்வூட்டும் தேடுதல் நடவடிக்கைக் குழுவில் ஏறாவூர் பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், ஆசிரியர்கள், சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அலுவலர்கள், கிராம மட்ட சமூக நல அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து கொண்டனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோரகல்லிமடு கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்ற பாடசாலை இடைவிலகலைத் தடுக்கும் கிராம மட்ட விழிப்புணர்வு நடவடிக்கை வெற்றியளித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

b f

LEAVE A REPLY