மட்டு-தொப்பிகலயில் குளவிக் கொட்டு: 33 பேர் வைத்தியசாலையில்…

0
201

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

k2மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பி மலையில் (தொப்பிகல) அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பூசை வழிபாட்டிற்காகச் சென்றவர்களில் பலர் மலை ஏறும்போது குளவிக் கொட்டுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 33 பேர் நேற்று (16) திங்கட்கிழமை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் 4 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

பாதிப்புக்குள்ளானவர்களை அப்பிரதேச இராணுவத்தினர் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சேர்ப்பிப்பதில் உதவியிருந்தனர்.

வருடா வருடம் குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் கண்ணகி அம்மன் ஆலய பூசை நிகழ்வில் கிரான், சந்திவெளி, திகிலிவெட்டை, கோராவெளி, பொண்டுகள்சேனை, மற்றும் முறக்கொட்டான்சேனை போன்ற கிராம மக்கள் கலந்கொள்வது வழக்கமாகும்.

k1 k6

LEAVE A REPLY