பெண் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு: காத்தான்குடி பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் பிணை

0
150

(விஷேட நிருபர்)

released_open_jailபெண்ணொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் கைதான இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது தலா 10,000 ரூபா மற்றும் ஒரு சரீர பிணையில் செல்லுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பெண்ணொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்தார்கள் எனும் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் கடந்த மாதம் (25.4.2016) காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

LEAVE A REPLY