பிரதியமைச்சா் பைசல் காசீமின் நடவடிக்கையின் பேரில் நடாத்தப்படும் இலவச மருத்துவ முகாம்

0
105

(அஷ்ரப் ஏ சமத் )

93b135c3-d513-4085-a470-57cbf3a0fd60மூதூர், தோப்பூர், கிளிவெட்டி, சம்பூர், சேனையூர் பிரதேச மக்களின் நலன்கருதி சுகாதார பிரதியமைச்சா் பைசல் காசீம் ஒழுங்கு செய்துள்ள அணைத்து நோய்களுக்குமான மருத்துவ முகாம் நடைபெறும். 500 நபர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் 19 திகதி மூதூர் அல் ஹிதாயா மஹா வித்தியாலய மண்டபத்தில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடைபெறும்.

இம் மருத்துவ முகாமுக்கு கொழும்பிலுள்ள பலவித நோய்களுக்கான வைத்திய நிபுணர்கள் கலந்து வைத்திய சேவை வழங்கவுள்ளனர். பொதுமக்கள் இவ் இலவச வைத்தியசேவையை பெற்று நன்மையடையுமாறு கேட்டுக்கொள்கின்றப்படுகின்றனா். இந் நிகழ்வில் திருமலை மாவட்ட அரசியல் பிரநிதிகள், பிரதியமைச்சா் பைசல் காசீமும் கலந்து கொள்வாா்கள்.

LEAVE A REPLY