இந்திய பயற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் தான் சிறந்தவர்- ரிக்கி பாண்டிங்

0
139

Pontingமுன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், தற்போதைய மும்பை இந்தியான்ஸ் அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங், இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை தெரிவு செய்ய ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,நான் ஒருவன் முடிவு செய்தால் மட்டும் போதது, பிசிசிஐ-யை தான் அதை முடிவு செய்ய வேண்டும்.

இந்திய பயிற்சியாளர் அல்லது வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ விரும்புகிறதோ?

ஆனால், டிராவிடை விட ஒரு சிறந்த பயிற்சியாளரை பிசிசிஐ-யால் கண்டுபிடிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.

மூன்று வடிவங்களான கிரிக்கெட்டில் அறிவும், அனுபவமும் நிறைந்த டிராவிட், இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட ஆர்வமாக இருந்தால், அந்த பணியை அவர் சிறப்பாக செய்வார்.

இந்திய அணி பயிற்சியாளர் வேட்பாளர்களில் சிறந்தவர் டிராவிட் தான்.பிசிசிஐ மற்றும் இந்திய அணியின் கேப்டன் விருப்பதை பொறுத்தே பயிற்சியாளரின் நியமனம் இருக்கும்.

தற்போது, தில்லி டேர்டெவில்ஸ் அணியின் வழிகாட்டியாக திகழ்ந்து வரும் டிராவிட், இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என பாண்டிங் கூறியுள்ளார்.

LEAVE A REPLY