புதிய பாடசாலை அமைக்கும் பணிகள் மந்தகதியில்..

0
188

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

8581fd01-56e4-4e11-96c9-7421c2de42beபாடசாலைக் கட்டிடம் இல்லாததன் காரணமாக தற்போது ஏறாவூர் றஹுமானியா வித்தியாலயத்தின் ஒரு பகுதியில் கடந்த 3 வருடங்களாக இயங்கி வரும் ஏறாவூர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தை புதிய இடத்தில் அமைப்பதற்காக கடந்த 2015.09.08 அன்று அதிகாரிகளினால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிட நிருமாண வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஆனால், ஆறு வகுப்பறைகளைக் கொண்ட அந்தப் புதிய பாடசாலைக்குரிய கட்டிட நிருமாண வேலைகள் ஒப்பந்தக் காலத்துக்குள் முடிவுறாததால் இரு தடவைகளில் ஒப்பந்தக் காலம் நீடிக்கப்பட்டது.

வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 8 மாதங்கள் கடந்து விட்டது. ஆயினும், இதுவரை சுமார் 35 சத வீதமான நிருமாணப் பணிகளே நிறைவு பெற்றுள்ளதாக பாடசாலை நிருவாகத்தினரும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரும் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது கால நீடிப்பு 2016.03.26ம் திகதியுடன் முடிவடைந்துள்ள நிலையில் இன்னமும் 65 சதவீதமான கட்டிட வேலைகளை முடிக்க வேண்டியுள்ளது.

இதேவேளை கடந்த 3 வருடங்களாக ஏறாவூர் றஹுமானியா வித்தியாலய கேட்போர் கூடத்தில் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் இடம்பெற்று வந்த ஏறாவூர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தின் முதலாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவர்களைக் கொண்ட இரண்டு வகுப்புக்கள் வேறு வழியின்றி திங்கட்கிழமை 16.05.2016 அரைகுறைக் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

சமீபத்திய கடும் மழையினால் றஹ{மானியா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் வெள்ள நீர் புகுந்ததே இதற்குக் காரணமாகும். கல்வி அதிகாரிகளின் அசமந்தப் போக்கினாலேயே புதிய பாடசாலை நிருமாணிப்பு விடயம் முடிவுறாமல் இந்தளவுக்கு இழுபட்டுச் செல்கின்றது எனக் கூறும் பெற்றோரும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரும் இந்த விடயத்தில் மாகாணக் கல்வி அதிகாரிகள் கூடுதல் அக்கறை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.

இப்பாடசாலைக்கு மூன்று மாடிகளைக் கொண்ட 50’×25′ அடி அளவுள்ள ஆறு வகுப்பறைகளை அமைப்பதற்காக 6,300,000,00 ரூபாய் அரசாங்க நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதேவேளை குறித்த கட்டிட ஒப்பந்தக்காரர் இரண்டு தடவைகள் நீடித்தும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கட்டிட நிருமாணப் பணிகளை நிறைவு செய்யாததால் அவரது ஒப்பந்தத்தை இரத்துச் செய்யும்படி பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மாகாணக் கல்விப் பணிப்பாளரைக் கேட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

13ed09f1-2ce5-496f-aa91-a8a30bf379a7

3460f867-0fa7-493b-b907-b80d4ba8f54f

8581fd01-56e4-4e11-96c9-7421c2de42be

b6ede357-5749-406c-b8e7-43469dbdf84c (1)

bad6dc8b-8711-4ef6-a438-19f5a9cdb99f

LEAVE A REPLY