(Poem) ஓடுகிற வண்டி ஓட…

0
71

kattankudy Flood New 1(Mohamed Nizous)

ஓடுகிற வெள்ளம் ஓட
வாடுகின்ற மக்கள் வாட
ஒண்ணு ரெண்டு கஷ்டம் இல்லை
பட்டவர்க்கே புரியும் பாரு.

ஆற்றுத் தண்ணி ரோட்டில் ஓடும்
சேற்றை கலக்கி சீற்றம் காட்டும்
பூட்டுப் போட்ட கதவைத் தள்ளி
வீட்டுக்குள்ளே தண்ணீர் பூரும்
கொட்ட கொட்ட மழையில் நனையும்
கொடுமை இங்கு பாரம்மா
பட்டவர்க்கே புரியுமம்மா
பட்ட பாடு தானம்மா

தாழமுக்கம் என்று சொல்வார்
ஆள அமுக்கும் அடங்கா வெள்ளம்
வேலை வெட்டி செய்ய முடியா
நாள் முழுதும் பாழாய்ப் போகும்.
கட்டும் அணையின் கதவைத் திறப்பது
கஷ்டம் தரும் பலபேர்க்கு
பட்டவர்க்கே புரியுமம்மா
பட்ட பாடு தானம்மா

LEAVE A REPLY