ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் நிருவாகப் பொறுப்புக்கள் செங்கலடியுடன் இணைக்கப்படமாட்டாது

0
382

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவிப்பு

( ஏ.எல் றியாஸ் )

Subair mpc 01“ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்தரிய அதிகாரி அலுவலகத்தின் ஏறாவூர்ப் பற்றுப் பகுதியின் நிர்வாகப் பொறுப்புக்கள் செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் ஒருபோதும் இணைக்கப்படமாட்டாது” என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்தரிய அதிகாரி அலுவலகத்தின் ஏறாவூர்ப் பற்றுப் பகுதியின் நிர்வாகப் பொறுப்புக்கள் செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைக்ப்படவுள்ளதாக வெளியான செய்தியினையடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் அதுதொடர்பில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை தொடர்பு கொண்டு இவ்வாறானதொரு நடவடிக்கையை அனுமதிக்க முடியாதெனவும், அவ்வாறான முயற்ச்சிகளை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.

இவ்விடயத்தினை கவனத்திற்கொண்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவ்வாறானதொரு முடிவு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவ்வாறான சம்பவங்கள் ஒருபோதும் இடம்பெறாது எனவும் மாகாண சபை உறுப்பினரிடம் உறுதியளித்தார்.

இவ்விடயம் தொடர்பாக விரைந்து செயற்பட்டு நல்லதொரு தீர்வினைப் பெற்றுக்கொடுத்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிருக்கு ஏறாவூர் பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY