மக்கள் வெளி உதவிகளில் தங்கிருக்காத நிலைமையை ஏற்படுத்துவதற்காக நாம் உதவுவோம்: சுபாஷி திஸாநாயக

0
121

(ஏ.எச்.ஏ. ஹு ஸைன்)

98cb39c2-b5f3-4090-838e-44de617dbf2aமட்டக்களப்பு மாவட்டத்தில் அத்தியாவசியமாக வீடு தேவையாகக் காணப்பட்ட குடும்பங்களுக்கு தலா 7 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 192 வீடுகளை அமைத்துக் கொடுத்திருப்பதாக முன்னர் சுவீடன் கூட்டுறவு நிலையம் என்று அறியப்பட்ட previously known as Swedish Cooperative Centre,’’ நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சுபாஷி திஸாநாயக்க தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசிப்பதற்கு ஒரு வீட்டை அமைத்துக் கொடுப்பதில் சுவீடன் மக்கள் தாராளத் தன்மையுடன் உதவியுள்ளார்கள் எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பேரில்லாவெளி கிராமத்தில் நிருமாணிக்கப்பட்ட 28 வீடுகளை போரினால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு கையளிக்கும் நிகழ்வு திங்களன்று 16.05.2016 இடம்பெற்றது.

“வீ எபெக்ற்” நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ. மயூரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சுபாஷி திஸாநாயக்க கூறியதாவது,

“வீ எபெக்ற்” நிறுவனத்தின் ஐந்தாவது வீடமைப்புத் திட்டமாக இந்தக் கிராமம் தெரிவு செய்யப்பட்டது.

முன்னர் சுவீடன் கூட்டுறவு நிலையம் என்று அறியப்பட்டு previously known as Swedish Cooperative Centre, தற்போது ‘‘வீ எபெக்ற்’’ என அழைக்கப்படும் இந்த நிறுவனம் இலங்கையில் 1979 ஆம் ஆண்டிலிருந்து கூட்டுறவு அபிவிருத்தியில் சிவில் சமூகத்தை வலுப்படுத்தல் எனும் விஷேட குறிக்கோளுடன் அநியாயத்தை இல்லாதொழித்து வறுமையைக் குறைப்பதற்கான இலக்கோடு செயற்பட்டு வருகின்றது.

அத்துடன் 2005 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து வருட காலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நன்மை பயக்கும் வகையில் நாட்டின் கிழக்கிலும் தெற்கிலும் மனிதநேய உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றது.

அந்த மனித நேய உதவித் திட்டத்தினூடாகவே இந்த வீடமைப்பும் மட்டக்களப்பில் மாத்திரம் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று. கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள ஏழு கிராமங்களில் இந்த வீடமைப்புத் திட்டத்தினூடாக 192 வீடுகளை நிருமாணித்து பயனாளிகளிடம் கையளித்திருக்கின்றோம்.

எனினும், இந்த வகையான திட்டத்தின் கடைசி வருடம் இதுதான். காரணம், கூட்டுறவு விழுமியங்கள் மற்றும் கொள்கைகளின் மூலம் மக்கள் எமது திட்டங்களினூடாக தாங்களாகவே வலுப்பெற்று தங்களுக்கிடையில் பரஸ்பரம் எல்லா செயற்பாடுகளிலும் உதவிக் கொண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் செயற்பட்டு நீதியுடனான உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதனூடாகவே மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைத் தரத்தை அடைந்து கொள்ள முடியும். இந்த மக்கள் அத்தகையதொரு வெளி உதவிகளில் தங்கிருக்காத நிலைமையை ஏற்படுத்துவதற்காக இவர்களுக்கு எதிர்காலத்திலும் நாம் உதவுவோம்.

நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த வீடமைப்புத் திட்டம் மாத்திரம் உதவப் போவதில்லை. இப்பொழுது உங்களிடம் இந்த வீட்டைக் கையளிக்கிறோம். அதேவேளை, இதனைப் பராமரிப்பது எப்படி என்ற அடுத்த பிரச்சினை உங்கள் முன்னால் இருக்கின்றது. அதனைச் சமாளிப்பதற்கு நீங்கள் பொருளாதாரத்தில் முன்னேறியாக வேண்டும்.” என்றார்.

இந்நிகழ்வில் “வீ எபெக்ற்”” நிறுவனத்தின் கணக்களார் அஸங்கி விஜேசூரிய, கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ. மயூரன், வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், உட்பட இன்னும் பல அதிகாரிகளும் பயனாளிகளான கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY