காத்தான்குடியில் வீதி விபத்துக்களை குறைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை

0
123

fca980c7-6778-4aec-b92d-785687fa860eமுப்பது வருட யுத்தகாலத்தில் இந்த நாட்டில் ஏற்பட்ட மரணங்களுக்கு பின்னர் அதிகமான மரணங்கள் வீதி விபத்துக்களாலே ஏற்படுகின்றன என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். அந்த வகையில் அண்மைக் காலமாக மட்டக்களப்பு காத்தான்குடி நகரம் அதிகளவான வீதி விபத்துக்கள் இடம்பெறும் நகரமாக மாற்றமடைந்து வருகின்றது.

இதனை உடனடியாக குறைக்கும் முகமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்கினால் கடந்த 2016.04.19ஆம் திகதி (செவ்வாய் கிழமை) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இது சம்பந்தமான கூட்டமொன்று இடம் பெற்றிருந்தமையினையும், ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தமையும் யாவரும் அறிந்த விடயமாகும்.

உடனடியாக வீதி விபத்துக்களை குறைக்கும் முகமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையானது மூடிகள் இடப்படாது இருக்கின்ற வடிகான்களுக்கு உடனடியாக 300 மூடிகளுக்கான ஏற்பாடுகளை மிக விரைவில் ஏற்பாடு செய்து தருவதாக குறித்த 2016.04.19ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்கிடம் வாக்குறுதியளித்திருந்தனர்.

அதற்கமைவாக 2016.05.16ஆம் திகதி (இன்று) முதற்கட்டமாக 100 வடிகான் மூடிகள் வழங்கப்பட்டு காத்தான்குடி நகரில் இருக்கின்ற வடிகான்களுக்கு மூடிகள் இடப்பட்டு வருவதோடு, அதனை அவதானிக்கும் நோக்குடன் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவ்விடத்திற்கு விஜயமொன்றினையும் மேற்கொண்டிருந்தார்.

மேலும் குறித்த கலந்துரையாடலில் வீதி அபிவிருத்தி அதிகார சபையானது மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்கிக்கு வழங்கிய வாக்குறுதியினை நிறை வேற்றும் முகமாக முதற்கட்டமாக 100 வடிகான் மூடிகளை வழங்கி குறித்த வேலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளமையானதயிட்டு மாகான சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு தனது நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.

5bcd7a68-8d1e-4e3a-b986-35615d56de2b

9c4b3bfc-9f6c-465c-894b-feef37bad9b5

3016f8e4-e055-4312-8297-cb02191b336b

c946d9f2-7c10-4877-a4f9-456a2eb3aef1

cf5686d1-9795-43ae-b25b-7011091561a7

LEAVE A REPLY