புதிய தலை­மு­றை­யி­ன­ருக்கு தலைமை தாங்கும் அரு­கதை முஸ்லிம் தலை­மை­க­ளிடம் இல்லை: பஷீர் சேகுதாவூத்

0
133

basheer12முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் பிழை­க­ளி­லி­ருந்து விடு­தலை பெறு­வ­துடன் புதிய தலை­மு­றை­யி­ன­ருக்கு வழி­காட்­டி­யாக அமைதல் வேண்டும்.இன்று புதிய தலை­மு­றை­யி­ன­ருக்கு தலைமை தாங்கும் அரு­கதை முஸ்லிம் தலை­மை­க­ளுக்கு இல்­லாமல் போயுள்­ளது.

முஸ்லிம் தலை­மை­க­ளிடம் பொதுப் பண்­புகள் சீர­ழிந்து போயுள்ள நிலையில் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் பிழை­க­ளி­லி­ருந்து விடு­தலை பெற்­றுக்­கொள்ள வேண்­டிய காலம் உரு­வா­கி­யுள்­ள­தாக முன்னாள் அமைச்­சரும் மு.கா. தவி­சா­ள­ரு­மான பசீர் சேகு­தாவூத் தெரி­வித்தார்.

கெலி­ஓயா கலு­க­முவ பலாஹ் குர்ஆன் மத்­ர­ஸாவின் பரி­ச­ளிப்பு விழா அதிபர் மௌலவி ஏ.எல்.எம். அஸ்ரப் தலை­மையில் நேற்று நடை­பெற்ற போது அவர் கலந்து கொண்டு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ,

இமாம் கஸ்­ஸாலி (றஹ்) அவர்கள் இஹ்­யாஉல் உலு­முத்தீன் என்ற மாபெரும் புத்­த­கத்தை எழு­தி­னார்கள். இப்­புத்­த­கத்தை எழு­திய பின்பு இமாம் கஸ்­ஸாலி (றஹ்) மற்­று­மொரு சிறிய புத்­த­கத்தை எழு­தி­னார்கள்.

இப்­புத்­த­கத்தின் பெயர் பிழை­க­ளி­லி­ருந்து விடு­தலை பெறுதல் என்­ப­தாகும். இப்­புத்­த­கத்தை இலங்கை அர­சி­யல்­வா­திகள் வாசிக்க வேண்டும்.

நான் இரு­பத்­தாறு வரு­ட­காலம் அர­சி­யலில் ஈடு­பட்டு வரு­கின்றேன். எனது அர­சியல் வாழ்க்­கையில் பிழை­க­ளி­லி­ருந்து விடு­தலை பெற்றுக் கொள்­வ­தற்­கான பய­ணத்தை ஆரம்­பித்­துள்ளேன்.

இக்­கா­லப்­ப­கு­தியில் நான் பொரு­ளா­தார ரீதி­யா­கவும் சமூக ரீதி­யாகவும் மேற்­கொள்ள வேண்­டிய கட­மை­க­ளி­லி­ருந்து தவ­றி­ழைத்து பிழை­க­ளி­லி­ருந்து விடு­த­லை­ய­டையும் பய­ணத்தை ஆரம்­பித்­துள்ளேன்.

இலங்கை முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் பிழை­க­ளி­லி­ருந்து விடு­தலை பெற்­றுக்­கொள்ள வேண்­டிய காலம் உரு­வா­கி­யுள்­ளது. நாம் பிழை­க­ளி­லி­ருந்து விடு­தலை பெற வேண்­டியது முக்­கி­ய­மா­ன­தாகும்.

ரஸூல் (ஸல்) அவர்கள் தனி­ம­னித மற்றும் சமூக வாழ்க்­கையில் கடை­பி­டித்த அஹ்­லாக்­கு­களை கடை­பி­டிக்கும் புதிய அர­சியல் தலை­மைத்­துவம் இளம் தலை­மு­றை­யி­ன­ரிடம் காணப்­ப­டு­கின்­றது.

இத்­த­கைய இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு வழி­காட்­டி­யாக முஸ்லிம் தலைமைகள் இருக்க வேண்டும்.

எமது முன்­னைய அர­சியல் தலை­மகள் குறிப்­பாக தனித்­து­வ­மான தலை­வர்கள் மேடை­களில் பேசும் போது எழுந்த நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்ற சப்தம் இன்று அர­சி­யல்­வா­தி­களை மையப்­ப­டுத்தி நாரே தக்பீர் என்று அர­சியல் சத்­த­மாக மாறி­யுள்­ளது.

கிறிஸ்­தவம் என்றால் கருணை , அமைதி என்றும் பௌத்தம் என்றால் கருணை , வன்­மு­றை­யற்ற கலா­சாரம் , தியாகம் என்றும் வியாக்­கி­யா­னப்­ப­டுத்­து­கின்­றனர்.

ஆனால் இஸ்லாம் என்றால் ஜஹாத் என்று விளக்கம் கூறு­கின்ற நிலை பர­வ­லாக காணப்­ப­டு­கின்­றது. இஸ்லாம் என்­பதை வன்­முறை என்று நோக்கும் போக்கு தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

அமை­தியை வலி­யு­றுத்தும் இஸ்­லாத்தைப் பற்றி பிழை­யாக வியாக்­கி­யானம் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இஸ்­லாத்தின் மீதான இப்­பார்வை மாற்­றி­ய­மைக்க வேண்­டிய கட­மைப்­பாடு எமக்­குண்டு.

நபி (ஸல்) அவர்­களின் காலத்தில் இஸ்லாம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட போது வன்­மு­றையும் யுத்­தமும் அரே­பி­யாவில் காணப்பட்டது. இதனை இஸ்லாம் மாற்றியமைத்தது. உலகத்தில் மட்டுமன்றி இலங்கையிலும் இஸ்லாத்தை நோக்கும் பார்வையை மாற்றியமைக்க வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தில் உருவாகும் புதிய தலைமுறைகள் தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் நபிகளாரின் பண்புகளை பின்பற்றும் தலைமைகளாக மாற்றியமைக்கும் பயணத்தை ஆரம்பிப்போம் என்றார்.

-Vidivelli-

LEAVE A REPLY