ஆந்திரா ஸ்டைல் இறால் ஃப்ரை

0
149

தேவையான பொருட்கள் :

இறால் – 500 கிராம்
வெங்காயம் – 2
பூண்டு – 3 பற்கள்
இஞ்சி – 1
பச்சை மிளகாய் – 3
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
சோம்பு தூள் – கால் டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
எண்ணெய் – தேவைக்கு
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை :

* கொத்தமல்லி தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இறாலை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின்னர் மிக்ஸியில் இஞ்சி மற்றும் மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

* அரைத்த விழுதை இறாலுடன் சேர்த்து, அத்துடன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சிறிது தூவி, நன்கு பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் அதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.

* அதில் பிரட்டி வைத்துள்ள இறாலை சேர்த்து, அத்துடன் தனியா தூள், சோம்பு தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் பிரட்டி, பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து மீண்டும் 3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

* இறுதியில் தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து பிரட்டி இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் இறால் ஃப்ரை ரெடி!!!

LEAVE A REPLY