பிலிப்பைன்சில் மீண்டும் மரண தண்டனை சட்டம்: புதிய அதிபர் அறிவிப்பு

0
97

201605161216482862_Philippines-Duterte-vows-to-bring-back-death-penalty_SECVPFபிலிப்பைன்ஸ் நாட்டில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தது. இது கடந்த 2006-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. அந்த சட்டம் தடை செய்யப்பட்டது.

சமீபத்தில் அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. அதில் ரோட்ரிகோ டுடெர்ட் வெற்றி பெற்றார். அவரது வெற்றி இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவர் வருகிற ஜூன் 30-ந் தேதி புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, சீனாவுடன் நெருங்கிய நட்புறவுடன் இருக்க விரும்புவதாக தெரிவித்தார். தென் சீன கடல் பிரச்சினை குறித்து அந்நாட்டுடன் பேச்சு நடத்த இருப்பதாகவும் அறிவித்தார்.

நாட்டில், குற்றங்கள் பெருமளவில் பெருகி விட்டது. எனவே கொடூர கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது தவிர்க்க முடியாதது. எனவே, மரண தண்டனை சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்றார்.

LEAVE A REPLY