வங்கதேசத்தில் பலத்த மழை:மின்னல் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 64-ஆக உயர்வு

0
101

rain-08வங்கதேசத்தில் பெய்து வரும் பலத்த மழையில் மின்னல் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 64-ஆக அதிகரித்தது.

இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிப்பதாவது:

வங்கதேசத்தில் கடந்த வியாழக்கிழமை வடமேற்குப் பருவமழை தொடங்கியது. டாக்கா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையின் போது மின்னல் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 64-ஆக அதிகரித்தது.

இதில், பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். பெரும்பலானோர் விவசாய வேலையில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கி பலியானதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “டாக்கா, சிட்டகாங்க், ராஜ்பர்கி, ஜோய்புர்காட், நாகோன், கய்பந்தா, நர்கயில், சுனம்கஞ்ச், சாந்த்பூர், மகுரா, கிஷோரிகஞ்ச், காஸிபூர் மற்றும் ஜெúஸார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 23 பேர் மின்னலுக்கு பலியாகினர்’ என்றனர்.

வங்கதேசத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் வடமேற்குப் பருவமழை பெய்கிறது. அப்போது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அந்நாட்டில் ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் மின்னல் தாக்கி சராசரியாக 300 பேர் வரை உயிரிழக்கின்றனர்.

எனினும், அதில் ஒரு சில உயிரிழப்புகள் மட்டுமே ஊடகங்களின் கவனத்துக்கு வருவதாக அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY