முஹமட் ஆசிக் கடத்தல்; கைதானவர்களின் வாக்குமூலம் இதுதான்

0
163

Mohamed Asikபிரமிட் திட்டம் என்று சட்டவிரோத முதலீட்டுத் திட்டத்துக்கு நிதியை பெற்றுக் கொள்ளும் நோக்கிலே வாரியபொல முஸ்லிம் வியாபாரி ஒருவரிடம் 2 கோடி ரூபாய் கப்பம் கோரி அவரின் மகனை கடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த முஸ்லிம் வியாபாரி மகனைக் கடத்திய பிரதான சந்தேக நபர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியில் பட்டதாரி என விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரமிட் திட்டம் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள போதும், அதற்கான நிதியை பெற்றுக் கொள்வதற்காகவே தாம் அவரை கடத்தியதாக, சந்தேகத்துக்குரியவர் வாக்கு மூலம் வழங்கி இருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அவர் கடனட்டை மோசடிகளை மேற்கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் வாரியபொல பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைதான மற்றுமொருவர், ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் பரிசோதனை அதிகாரி என்றும் கூறப்படுகிறது.

கடந்த 12 ஆம் திகதி இரவு வாரியப்பொல பகுதியில் வைத்து மொஹமட் ஆசிக் என்ற 20 வயதான இளைஞர் ஒருவர் அவர்களால் கடத்தப்பட்டிருந்தார். அவர் நிக்கவெரட்டிய பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

-ET-

LEAVE A REPLY