விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞன் பலி

0
195

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

how_to_get_rid_of_dead_body_smellகளுவாஞ்சிக்குடிப் பிரதான வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை 13.05.2015 இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சனிக்கிழமை மாலை உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. சொறிக்கல்முனை நாவிதன்வெளியைச் சேர்ந்த நேமிநாதன் நிறோஜ் (வயது 20) எனும் வாலிபரே மரணித்தவராகும்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பில் இருந்து நாவிதன்வெளிக்குச் சென்று கொண்டிருந்தபோது அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள மதகு ஒன்றில்மோதியுள்ளது.

அந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மட்டக்களப்புக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மண்முனைத்துறை பிரதான வீதியில் சனிக்கிழமை 14.05.2015 இரவு முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததில் காயமடைந்து மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரில் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கப்போடி மகேந்திரன் (வயது 19), மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநரான எஸ். சுதா (வயது 25) ஆகியோர் மட்டக்களப்பு பேதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

அந்த விபத்தில் காயமடைந்த மூன்றாவது நபரான சேகரன் லதாகரன் (வயது 18) தொடர்ந்தும் மகிழடித்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவங்கள் பற்றி பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

LEAVE A REPLY