கஞ்சாவுடன் இளைஞனும் குடும்பஸ்தரும் கைது

0
194

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Arrestமட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் ஓடாவியார் வீதி மற்றும் மாவடிவெம்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரை திங்களன்று 16.05.2015 கஞ்சாவுடன் கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்குச் சென்று சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்ததோடு அவர்கள் வசம் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

ஏறாவூர் ஓடாவியார் வீதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞனிடமிருந்து அவர் வீதியில் நடமாடிக் கொண்டிருந்தபோது 3000 மில்லிகிராம் கஞ்சாவும், மாவடிவெம்பு கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான குடும்பஸ்தரை அவரது வீட்டில் வைத்து 3750 மில்லி கிராம் கஞ்சாவுடனும் கைப்பற்றி சந்தேக நபர்களைக் கைது செய்தள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் தாம் இது பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.

இதேவேளை கஞ்சா மற்றும் போதைப் பொருள் பாவினை மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்களிடமிருந்து ஒத்துழைப்பான விதத்தில் தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுவருவதாக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY