(Poem) மழை நாளில்….

0
29

(நிஷவ்ஸ் )

கறுக்கிறது வானம்
உலரப் போட்ட உடுப்பை
ஓடிப் போய் எடுக்குமுன்
பேஷ் புக்கைத் திற
பெய்யப் போகிறது என்று
பிரண்டை tag பண்ணு.
தூறல் தொடங்குகிறது.
வானத்தை ரசிக்கு முன்
வட்ஸப்பில் போடு.
அடை மழை பெய்கிறது
முன் கதவை மூடு முன்
முக நூலில் போடு.
உடை நனைந்து வருகிறான்
குடையில்லாப் பிள்ளை
டவல் எடுத்து துவட்டு முன்
படம் எடுத்துப் பகிர்.
ஓட்டிலே விழுந்த நீர்
வீட்டுக்குள் வருகிறது
பேசனை வைக்கு முன்
பேஷ்புக்கில் feeling இடு.
மின்னலும் இடியும்
பின்னி எடுக்கிறது
இன்னும் கொஞ்ச நேரம்
இண்டனெட் இல்லையென்று
ஏக்கம் கொள்
மழைத்துளி எண்ணிக்கையில்
மலைக்கும் அளவு
லைக்கள் வருமா?
என் வீட்டுக் கூரையை
எப்போது திருத்துவது?
ஏழை ஏங்குவது போல்
ஏங்கு லைக்களுக்காய்.

LEAVE A REPLY