வித்ய ஒளி’’ கௌரவிப்புக்கான நேர்முகத் தேர்வு

0
140

(எம்.எஸ்.எம்.சாஹிர்)

414e8a3a-3343-46ea-8511-232c14b6cf40சம்மாந்துறை பஸ்பெக் அமைப்பின் ஏற்பாட்டில் இம்மாதம் இறுதிப் பகுதியில் இடம்பெறவுள்ள “தேன் மழை” கலை, கலாசார, வர்த்தக விழாவின் ஓர் அங்கமான சிறந்த முன்பள்ளி பாடசாலைகளை கௌரவிப்பதற்கான “வித்ய ஒளி” கௌரவிப்புக்கான நேர்முகத் தேர்வு நேற்று (2016.05.14) சமாதான கற்கைகள் நிலையத்தில் பஸ்பெக் அமைப்பின் பொதுச்செயலாளரும், நவமணி பத்திரிகையின் ஆசிரியர் பீட உறுப்பினருமான கியாஸ் ஏ. புஹாரி தலைமையில் இடம்பெற்றது.

இந்நேர்முகத் தேர்வில் 45 பாடசாலைகள் பங்கேற்றிருந்த அதே வேளை 30 பாடசாலைகள் மாத்திரமே “வித்ய ஒளி” கௌரவிப்புக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தன.

இதில் நிகழ்ச்சி இணைப்பாளரான அமைப்பின் அங்கத்தவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான எப். பெரீஸ் முஹம்மட் இன் ஏற்பாட்டில், நடுவர்களாக சமாதான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல். றியாஸ், சம்மாந்துறை கோட்டக் கல்வி அலுவலகத்தின் இணைப்பாளர் இஸட்.எம். றிஸ்வி, எம்.ரீ. றிபாயிஸ் ஆசிரியர் ஆகியோர் கடமையாற்றினர்.

மேலும் இறுதி நாள் நிகழ்வில், தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கான கௌரவிப்பும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY