சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த சுஷ்மா சுவராஜ் வீடு திரும்பினார்

0
105

201605151334424490_Swaraj-discharged-from-AIIMS_SECVPFகாய்ச்சல் மற்றும் நெஞ்சு வலி காரணமாக புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த இருபது நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று வீடு திரும்பினார்.

மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் காய்ச்சல், நெஞ்சு வலி காரணமாக கடந்த மாதம் 25-ம் தேதி புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

64 வயதான சுஷ்மாவுக்கு ஏற்கனவே கடுமையான நீரழிவு நோய்(சர்க்கரை) இருக்கிறது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அவருக்கு நீரழிவு நோய் பிரச்சனை உள்ளது. இந்நிலையில், எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் உள்ள நுரையீரல் மருத்துவம் சார்ந்த வார்டில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் அங்கிருந்து கார்டியோ நியூரோ என்ற இதயவியல் நோய் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுஷ்மா சுவராஜை பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

சுமார் இருபது நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த சுஷ்மாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக எய்ம்ஸ் டாக்டர்கள் முன்னர் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அவர் முற்றிலுமாக குணமடைந்ததையடுத்து, இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY