சேதன வீட்டுத்தோட்ட விழிப்புணர்வும் இயற்கை விவசாய அறுவடையும்

0
247

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

8b430f63-b01c-47ac-81b6-714158cdcf8dமட்டக்களப்பு வடக்கு விவசாய வலய வாகரை பிரதேசத்திற்கு உட்பட்ட காயான்கேணியில் சேதன வீட்டுத்தோட்ட விழிப்புணர்வு நிகழ்வும், இயற்கை விவசாய மரக்கறி அறுவடை விழாவும் வெள்ளிக்கிழமை 13.05.2016 இடம்பெற்றது.

இதில் விவசாய இரசாயனங்களால் ஏற்படும் பாதிப்புக்கள், இயற்கை பீடைநாசினி மற்றும் சேதனப்பசளை தயாரிப்பு, சணல், சோயா செய்கை, மூடுபடை முக்கியத்துவம் ஆகியன பற்றி விவசாயப் போதனாசிரியர்களால் விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டதுடன் செய்முறையிலும் மாதிரிகள் காட்டப்பட்டன.

வாகரைப் பிரிவு விவசாயப் போதானாசிரியை ஐ. துஷ்சந்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விவசாய அதிகாரிகள், விவசாயப் போதனாசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதாரத் திணைக்கள அலுவலர்கள், விவசாய நல அமைப்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

8b430f63-b01c-47ac-81b6-714158cdcf8d

d7fdf9b6-f60d-4700-ad6d-f3afb71d0355

d8c126a4-41ef-4b53-a9dd-97eb3aabdd1c

e61541cb-f514-499a-83b2-a057547f7193

LEAVE A REPLY