மரண தண்டனைகளுக்கு தமது மருந்துகளை பயன்படுத்த ஃபைசர் எதிர்ப்பு

0
127

160514123918_pfizer_execution_usa_512x288_imagecopyrightgettyimages_nocreditநோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கே தாம் மருந்துகளை தயாரிப்பதாக தெரிவித்துள்ள ஃபைஸர் நிறுவனம், மனித உயிர்களை பறிப்பதற்காக அல்ல எனவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஊசிகள் மூலம் விஷம் கலந்த மருந்துக்கலவையை பயன்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் கிடைப்பதற்கு இருந்த இறுதி வழிமுறையும், இந்த அறிவிப்பை அடுத்து முடிவிற்கு வந்துள்ளது.

அமெரிக்காவில் விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது. படிப்படியாக ஊசிகள் மூலம் மருந்தை உடலுக்குள் ஏற்றி, மரணதண்டனைக் கைதிகளை தூக்கத்திற்கு உள்ளாக்கி, அவர்களது சுவாசத்தை தடுத்து, மாரடைப்பினை ஏற்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றும் முறையினையே நாடுகள் பாராம்பரியமாக பின்பற்றி வருகின்றன.

வெவ்வேறு மருந்துகளை கலந்து தயாரிக்கப்படும் ஊசி மருந்துகளே இதில் ஏற்றப்படுகின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் அவ்வாறான மருந்துகளை ஏற்றுமதி செய்ய தடை வித்ததை அடுத்தே அமெரிக்காவின் மிகப்பெரும் மருந்து தயாரிப்பு நிறுவனமும் மரண தண்டனைக்கு தமது மருந்துகளை பயன்படுத்த கூடாது எனக் கூறியுள்ளது..

இப்படியானொதொரு தீர்மானத்தை அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள 20 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எடுத்துள்ளன. இதையடுத்து மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் புதிய மருந்துக் கலவைகளை அமெரிக்க அதிகாரிகள் தேடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY