விளையாட்டில் ஊக்கமுள்ள 100 மாணவர்களுக்கு இரண்டரை இலட்ச ரூபாய் பெறுமதியான விளையாட்டுக் காலணிகள் அன்பளிப்பு

0
135

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

a3d923c1-2773-4fec-90c8-df2c6ecdc20eஏறாவூரில் விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட விளையாட்டுக்காக பயன்படுத்தும் காலணிகள் வழங்கி வைக்கப்பட்டதாக இலங்கை வலுவூட்டல் மற்றும் அபிவிருத்திக்குமான மனித சேவைகள் நிறுவனத்தின் தலைவர்  கே. அப்துல் வாஜித் தெரிவித்தார். சிறு பராயத்திலிருந்தே சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஞாயிறன்று 15.05.2016 மேற்படி நிறுவனத்தின் ஏறாவூர் அலுவலகத்தில் அதன் தலைவர் கே. அப்துல் வாஜித் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தலா 2500 ரூபாய் பெறுமதியான விளையாட்டுக் காலணிகள்  (Sports Shoe) வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் நிறுவனத்தின் செயலாளரும் வெளிவிவகார அமைச்சின் உத்தியோகத்தருமான ஏ.டபிள்யூ.எம். பௌஸ், மற்றும் அதன் அலுவலர்களான ஏ.எம். றஸ்மி, எம்.பி.எம். அஜ்மல், ஏ.எம்.எம். நசுர்தீன் உட்பட பயனாளிகளான விளையாட்டுச் சிறார்களும் கலந்து கொண்டனர்.

764d7041-e07e-4d4e-8580-4d22ce4737a8

LEAVE A REPLY