பல்துறைகளில் சமூக சேவைக்கு தொண்டாற்றியவர்கள் கௌரவிப்பு

0
209

(M.T. ஹைதர் அலி)

13087918_10209016259193294_2455140617346201190_nமக்கள் பாதுகாப்புக்கான மனித உரிமைகள் அமைப்பினால் நாடு பூராகவுமுள்ள அனைத்து பிரதேசங்களிலுமிருந்து பல்வேறு துறைகளில் சமூக சேவைக்கு தொண்டாற்றியவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்வைபவமானது நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3.00 மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் குறித்த அமைப்பினால் ஏற்பாடு செய்யப்ட்டு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேல் மாகாண சபையின் விவசாய அமைச்சர் காமினி திலகஸ்ரீயும், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், மேல் மாகாண சபை உறுப்பினர்களான அர்சத் நிசம்டீன் மற்றும் பாயிஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நாடு பூராகவும் தெரிவு செய்யப்பட்டு சமூக சேவைக்கு பல்துறைகளிலும் தொண்டாற்றியவர்கள் அதிதிகளால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

13177548_10209016291034090_3164183061194502781_n 13245451_10209016281153843_1749877342622888580_n

LEAVE A REPLY