அமைச்சரவையில் நடப்பதை அம்பலப்படுத்தி மக்களை சூடாக்கும் அயோக்கிய அரசியல் எங்களிடம் இல்லை: தலைவர் ஹக்கீம்

0
142

978010d9-d739-485b-a40a-ec45cb9ceebc“சமூகத்தின் பிரச்சினைகள் என்றுவரும்போது முஸ்லிம் காங்கிரஸ் எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்யாது, அப்படி செய்த இயக்கமாக ஒருபோதும் இருந்தது இல்லை” என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் ரவுப் ஹகீம் அவர்கள் நேற்று குருநாகல் மாவட்டத்தில் நிக்கவெரட்டிய தொகுதியில் வெல்பொதுவெவ கிராமத்தில் கிராமிய நீர்விநியோக திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார் .

மேலும் குறிப்பிட்டதாவது,

“இந்த நாட்டிலே முஸ்லிம்களுக்கு பாதகமான தேர்தல் முறை ஒன்றை கொண்டுவர முற்படும்போது தான் மௌன விரதம் அனுஸ்தாபிப்பதாக இன்று சிலர் எழுதிருப்பதை தான் பார்க்கின்றேன். கடந்த வாரம் அது பற்றிய கூட்டம் நடந்தபோது மிகவும் வன்மையான வாக்குவாதம் பிரதமருக்கும் எனக்கும் நடந்தது. இதை நான் வெளியில் வந்து பத்திரிகைக்கு சொல்லி எழுதவைக்கும் வழக்கம் எனக்குக் கிடையாது. அது நாகரிகமான பழக்கமும் அல்ல.

அமைச்சரவைக்குள்ளே ஜனாதிபதியோடும் பிரதமரோடும் எந்தந்த விடயங்களில் முரண் படுகிறோம் எந்தந்த விடயங்களில் ஒத்திசைந்து போகின்றோம் என்ற விசயங்களை பத்திரிகைக்கு கொடுக்கின்ற சிலரும் இருக்கலாம். தலைவர்கள் என்ற தொப்பியை போட்டு கொண்டு அந்த விதமான வேளை பார்க்கின்ற அயோக்கியதனமான அரசியல் எனக்கு தெரியாது. ஆனால் இருந்த எல்லோருக்கும் தெரியும் பிரதமருடன் நான் வாக்குவாதப்பட்டது.

கொண்டுவறப்படுகின்ற கலப்பு தேர்தல் முறையில் இருக்கின்ற குறைபாடுகள் அதிலும் முஸ்லிம்களுக்கான தேர்தல் பிரதிநிதித்துவம் ஆசனங்கள் சம்மந்தமான விடயத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை இருக்கின்ற அபாயங்களை மிக அணுக்க நுணுக்கமாக ஆராய்ந்து கொண்டு அது சம்மந்தமான கருத்து கூறியது மட்டுமல்ல தேர்தல் சீர்திருத்தம் சம்மந்தமான ஒரு உடன்பாட்டை முதலிலே கொண்டுவருவது எப்படி இருந்தாலும், எந்த உடன் பாட்டையும் முழு அரசியல் யாப்பையும் அதனுடைய திருத்தங்களில் உடன்பாடு காணாது எங்களால் அங்கீகரிக்க முடியாது என்பதையும் திட்டவட்டமாக முடிவு எடுத்துள்ளோம்.

சிறிய கட்சிகளை அழைத்து சிறிய கட்சித்தலைவர்களோடு வேறாக பேசி அவர்களோடு கூட்டாக சேர்ந்து பெரிய கட்சிகள் எங்களை விழுங்கி விடுகின்ற சிறுபான்மை சமூகங்களின் சிறிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதித்துவத்தை கபடமாக பறிக்கின்ற முயற்சிகளை செய்யாமல் தடுக்கின்ற உபாயங்களை சானாக்கியமாக செய்து கொண்டு இருக்கின்றோம்.

இந்த சூல்நிலலையில் வேண்டுமென்றே புரட்டுக்களை பத்திரிகைகளில் போடுபவர்கள், அதற்கென்று முகநூல் பக்கங்களை வைத்துகொண்டு பிரச்சாரம் செய்கின்ற கூட்டம்கள் மகிந்தவோடு இருக்கின்றபோது மகிந்தவுக்கு வக்காலத்து வாங்குவது, தேர்தல் வருகின்றபோது வெற்றிலையில் சரணடைபது, தருணம் வரும் போது ஆட்சி மாற்றம் வரப்போகுது என்று திடீரென்று முஸ்லிம்களின் பாதுகாவலனாக காட்டிக்கொண்டு மாறுவது என்று ஒரு சிலர் நாடகம் ஆடலாம்.

ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கு இருந்த போதும் நாங்கள் எதிரியாகத்தான் பார்க்கப்பட்டோம். இங்கு வந்த போதும் நாங்கள் நிரந்தர நண்பர்களாக பார்க்கப்படுவதில்லை. இது எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் சமுகத்தின் பிரச்சினைகள் என்று வரும்போது எங்களால் விட்டுக்கொடுப்புக்களை செய்யமுடியாது.

அநாகரிகமாக பத்திரிகைகளிள் கொட்டெழுதுக்களில் பெயர்வர வேண்டும் என்பதற்காக அமைச்சரவைலோ, பாரளுமன்றிலோ, வெளியிலோ எழும்பி கூச்சல் போட்டுவிட்டு அதை அடுத்த கணமே தொலைபேசியில் பத்திரிகையாளர்களுக்கு சொல்லி போடவைக்கின்ற அயோக்கிய அரசியலும் எனக்கு தெரியாது. அது செய்யவேண்டிய வாங்குறோத்து நிலையிலும் நான் இல்லை” என ரவுப் ஹகீம் தெரிவித்தார்.

இதில் வட மேல் மாகாண சபை உறுப்பினர்களான ரிஸ்வி ஜவஹர்ஷா, நியாஸ், தொகுதி அமைப்பாளர் ரிஸ்வி உட்பட பிரதேச மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தின் மூலம் குருநாகல் மாவட்டம் அபுக்காகம பிரதேசத்தில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY