(Poem) யோக்கியர்கள்

0
22

(Mohamed Nizous)

நான்கு வகை யோக்கியர்கள்
நம்மிடையே உண்டு
ஈங்கதனை எழுதுகிறேன்
எதிர்க்கலாம் சில ஆட்கள்

மாட்டி முழிக்கிறவன்
மட்டுமே அயோக்கியன்
மாட்டாமல் செய்யிறவன்
மா பெரும் யோக்கியனாம்

கெட்ட செயல் வாய்ப்பு
கிடைக்காத காரணத்தால்
கெட்டப்பு போட்டு சிலர்
கிடக்கிறார் யோக்கியராய்

உண்மையான பெயரினிலே
உள்ள fb போராளி
இன்னுமொரு யோக்கியராம்
இடுகின்ற ஸ்டேட்ஸ்களால்.

நான்காவது கூட்டம்
நாயனைப் பயந்ததனால்
நீங்காத நேர்மையுடன்
நிலைக்கிறார் யோக்கியராய்.

LEAVE A REPLY