சாய்ந்தமருதில் இன்று அதிகாலை வெடிச்சம்பவம்: தம்பதியினர் காயம்

0
98

New Year's Bangசாய்ந்தமருது பகுதியில் அதிகாலை இடம்பெற்ற வெடிச் சம்பவமொன்றில் தம்பதியினர் காயமடைந்துள்ளனர்.

சாய்தமருது, குவாட்டர்ஸ் வீதி பகுதியில் இன்று அதிகாலை 2.30 அளவில் இந்த வெடிச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள வீடொன்றைச் சேர்ந்த கணவனும், மனைவியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கணவன் தற்போது சாய்ந்தமருது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

66 வயதான கணவனும், 61 வயதான மனைவியும் வெடிச் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

இந்த வெடிச்சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

அத்துடன், கல்முனை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

#News1st

LEAVE A REPLY