வாரியபொலையில் முஸ்லிம் வியாபாரியின் மகன் கடத்தலும் அமைச்சர் ஹக்கீமின் நடவடிக்கையும்!

0
237

(அப்ஹம் என் ஷபீக்)

Photoநேற்றைய முன்தினம் (12) இரவு வாரியபொல முஸ்லிம் வியாபாரி ஒருவரிடம் கப்பம் பெறும் நோக்கில் அவரது 20 வயதுடைய மகனை இனந்தெரியாத குழுவொன்று கடத்தியுள்ளது. வாரியபொல, மல்வத்தயில் வசிக்கும் 20 வயதுடைய மொஹமட் ஆசிக் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நேற்று (13) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வாரியபொலை பிரதேசத்துக்கு சென்ற போது கடத்தப்பட்ட ஆசிக் என்பவரின் உறவினர்கள் அமைச்சரை சந்தித்து நடந்த சம்பவத்தை எத்திவைத்தார்கள் .

Mohamed Asikகுறித்த தினம் இரவு 8.20 மணிக்கு மிதிவண்டியில் வாரியபொல நகர் நோக்கி சென்று கொண்டிருக்கையில் வெள்ளை நிற வாகனமொன்றில் வந்த குழுவொன்று பாதையை குறுக்கிட்டு இந்த இளைஞனைக் கடத்தியுள்ளதாகவும் பின்னர், இளைஞனின் தொலைபேசியில் வீட்டுக்குத் தொடர்பு கொண்டு 2 கோடி ரூபா தருமாறு மிரட்டியதாகவும் தெரிவித்தார்கள்.

இது தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் குருநாகல் மாட்ட பொலிஸ் மா அதிபருக்கு தொடர்பு கொண்டு விசாரனைகள் துரிதப்படுத்துமாறும், கடத்தப்பட்ட இடத்தில் இருக்கும் ஹாட்வேயார் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீரி.வி. கமராவை சோதனையிடுமாறும், தொலைத்தொடர்பு நிறுவனத்தின் உதவியுடன் தொலைபேசி அழைப்பு வரும் இடத்தை விரைவாக கண்டுபிடிக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

இருப்பினும், கடத்தப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி. கமரா அவ்வேலை ஓப் பன்னியிருந்தாக சீ.சீ.ரீ.வி உரிமையாளர் குறிப்பிட்டதாக கடத்தப்பட்டவரின் உறவினர்கள் அமைச்சரிடம் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் குருநாகலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஆகியோர் நேரடியாக களத்தில் இறங்கி விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

LEAVE A REPLY