எகிப்தில் நுழைவதற்கு கட்டார் ராஜதந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு

0
94

Qatar_Airways_Boeing_777-300ERகட்டாரைச் சேர்ந்த நான்கு பெண் ராஜதந்திரிகளுக்கு கெய்ரோ சர்வதேச விமான நிலையத்தில் எகிப்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பஹ்ரைனிலிருந்து கெய்ரோ விமான நிலையத்திற்கு வந்த இந்த ராஜதந்திரிகளுக்கு விமான நிலையத்தில் விசா மறுக்கப்பட்டதோடு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

எகிப்தின் வெளிநாட்டு விவகார அலுவலகத்தின் ஆலோசனையின்படியே இவர்களுக்கான வீசா மறுக்கப்பட்டதாகவும் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எகிப்தில் ஜனாதிபதி முர்ஸி பதவி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. முர்ஸி பதவி கவிழ்க்கப்பட்டமை ஒரு இராணுவ சதிப் புரட்சி எனவும் சட்டவிரோதமானது எனவும் கட்டார் அரசாங்கம் கருதுகின்றது.

இதேவேளை, சகோதரத்துவ இயக்கத்திற்கு கட்டார் அரசாங்கம் ஆதரவளிப்பதாக எகிப்திய அரசாங்கம் கருதுகின்றது.

LEAVE A REPLY