வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு: நடந்த உண்மைகளை சொல்ல சுமித் சம்­பிக்க பெரேரா ஒப்புதல்

0
197

vasimmmmmm1பிர­பல றக்பி வீரர் மொஹம்மட் வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்­பட்ட விவ­காரம் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்ள முன்னாள் நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரேரா, அந்த படு­கொலை குறித்து தான் அறிந்த அனைத்­தையும் இர­க­சிய வாக்கு மூல­மாக நீதி­வா­னுக்கு வழங்க முன் வந்­துள்ளார்.

இதற்­கான விருப்­பத்தை தன்­சார்­பாக நேற்று மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ரண ஊடாக அவர் வெளிப்­ப­டுத்­தினார்.

இத­னி­டையே வஸீம் தாஜு­தீனின் படு­கொ­லையை மூடி மறைத்து அதனை விபத்­தாக காட்ட பல உயர் பொலிஸ் அதி­கா­ரிகள் முயற்­சித்­துள்­ளமை இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ள­தா­கவும், அவர்கள் யாரின், எந்த குழுவின் தேவைக்­காக அப்­படி மறைத்­தனர்?, அதற்­கான காரணம் என்ன? அவர்­க­ளுக்கு அது தொடர்பில் உத்­த­ரவு வழங்­கி­யது யார்?

போன்­ற­வற்றை வெளிப்­ப­டுத்­திக்­கொள்ள தற்­போது தீவிர விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு கொழும்பு மேல­திக நீதி­வா­னுக்கு எழுத்து மூலம் அறி­வித்­துள்­ளது.

அத்­துடன் சாட்­சி­யாக கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சி.சி.ரி.வி. காட்­சி­களை கனடா, இங்­கி­லாந்து ஆய்வு கூடங்­க­ளுக்கு அனுப்­பு­வது குறித்த பேச்­சுக்கள் இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்ள நிலையில் 5 சி.சி.ரி.வி. காட்­சிகள் அடங்­கிய இறுவட்­டுக்­களை விரைவில் அவ்­வாய்வு கூடங்­க­ளுக்கு அனுப்­ப­வுள்­ள­தா­கவும் புல­னாய்வுப் பிரிவு மன்­றுக்கு அறி­வித்­தது.

இந் நிலையில் வஸீம் தாஜு­தீனின் கொலையைத் தொடர்ந்து அவ­ரது சடலம் மீது முதல் பிரேத பரி­சோ­தனை செய்து சமர்­பிக்­கப்­பட்ட அறிக்கை குறித்து இலங்கை மருத்­துவ சபை முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணையின் முடிவும் அடுத்த கட்ட விசா­ர­ணைக்கு மிக அவ­சி­ய­மா­னது எனவும் புல­னாய்வுப் பிரிவு நீதி­வா­னுக்கு அறி­வித்­துள்­ளது.

படு­கொலை செய்­யப்­பட்ட வஸீம் தாஜு­தீனின் மரணம் குறித்த விசா­ரணை நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போதே மேற்­படி விட­யங்கள் விசா­ர­ணை­யா­ளர்­க­ளான குற்றப் புல­னாய்வுப் பிரிவு மற்றும் சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ரான பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரே­ராவின் சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ரண ஆகி­யோரால் மன்­றுக்கு முன்­வைக்­கப்­பட்­டன.

நேற்றைய வழக்­கா­னது விசா­ர­ணைக்கு வந்த போது குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் சிறப்பு மேல­திக விசா­ரணை அறிக்கை ஒன்று நீதிவான் நிஸாந்த பீரி­சுக்கு சமர்­பிக்­கப்­பட்­டது. அந்த அறிக்­கையில்,
‘ வஸீம் தாஜுதீன் கொலை விவ­கா­ரத்­துடன் இணைத்­த­தாக முன்­னெ­டுக்­கப்ப்ட்டு வரும் சிறப்பு விசா­ர­ணை­களில் இது வரை 20 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். இவர்கள் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் வாக்கு மூலங்­களும் ஒன்­றுக்­கொன்று முரண்­பா­டா­ன­தாக உள்­ளது. இவர்­களில் பலர் மீளவும் விசா­ரணைச் செய்­யப்­பட்­டனர்.

அதன்­படி வஸீம் கொலை தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்கு உயர் பொலிஸ் அதி­கா­ரி­களின் இடை­யூறு, அழுத்தம் இருந்­தமை தொடர்பில் உறு­தி­யா­கி­றது. இந்த அழுத்­தத்­தினை குறிப்­பிட்ட உயர் அதி­கா­ரிகள் எதற்­காக, என்ன கார­ணத்­துக்­காக, யாரின் தேவைக்­காக செய்­தார்கள் என்­பது குறித்து நாம் தற்­போது தீவிர விசா­ர­ணை­களை செய்­து­வ­ரு­கிறோம்.

அத்­துடன் தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்ள நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் முன்னாள் குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரேரா, வஸீமின் கொலையை அடுத்து, வஸீம் தாஜுதீன் பயன்­ப­டுத்­திய தொலை­பேசி இலக்கம் குறித்த அறிக்கை ஒன்­றினை குறிப்­பிட்ட தொலை­பேசி நிறு­வ­னத்­திடம் இருந்து பெற்று ஆய்வு செய்­துள்ளார்.

இந்த அறிக்­கையை அவர் பெற்­றது தொடர்பில் எமக்கு பல­மான ஒரு சந்­தேகம் உள்­ளது. அத்­துடன் கிரு­ளப்­பனை பகு­தியில் வஸீ­முக்கு சொந்­த­மான பணப் பை சிக்­கிய போதும் அது தொடர்பில் இந்த அதி­காரி விசா­ரணைச் செய்­யாமல் இருந்­த­மை­யா­னது எமது சந்­தே­கத்தை மேலும் அதி­க­ரிக்­கின்­றது.

இதனால் சந்­தேக நப­ரான பொலிஸ் அதி­காரி கொலைக்­கா­ரர்­க­ளுடன் சேர்ந்து இந்த கொலைக்கு சதி செய்­தாரா? அல்­லது அதனை அவர் முன் கூட்­டியே அறிந்­தி­ருந்­தாரா போன்ற சந்­தே­கங்­களை தெளி­வு­ப­டுத்த மேல­திக விசா­ர­ணைகள் அவ­சியம். அவற்றை நாம் தற்­போது முன்­னெ­டுக்­கின்றோம்.

சம்­பவம் தொடர்பில் பல­ரிடம் நாம் வாக்கு மூலங்­களைப் பெற்­றுள்ளோம். பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு மேல­தி­க­மாக பல பொது மக்­க­ளி­டமும் வாக்கு மூலங்­களைப் பெற்­றுள்ளோம். அது குறித்து மேல­திக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.’ என குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் சார்பில் மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த அரச சிரேஷ்ட சட்­ட­வாதி, டிலான் ரத்­நா­யக்க மன்றில் கருத்­துக்­களை முன் வைத்தார்.

‘ வஸீம் படு­கொலை தொடர்பில் சில உயர் பொலிஸ் அதி­கா­ரிகள் தொடர்பில் நாம் மிகத் தீவி­ர­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ளோம். அத்­துடன் குற்றப் புல­னய்வுப் பிரி­வி­னரால் சாட்­சி­யாக மீட்­கப்­பட்ட சி.சி.ரி.வி. காணொ­ளிகள் அடங்­கிய இறுவட்­டுக்­களை கனடா மற்றும் இங்­கி­லாந்து ஆய்­வு­கூ­டங்­க­ளுக்கு அனுப்­பு­வது குறித்­தான நட­வ­டிக்­கைகள் குறித்து அந் நிறு­வ­னங்­க­ளுடன் தொடர்­பேச்­சுக்­களை நடத்தி இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளோம். அவை மிக விரை­வாக அனுப்­படும்.

இதனை விட நாம் தொடர்ந்தும் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­க­ளுக்கு, தற்­போது மொபிடல் நிறு­வ­னத்தின் ஒத்­து­ழைப்பு அவ­சி­ய­மா­கி­றது. அவர்கள் சில தொலை­பேசி வலை­ய­மைப்பு தக­வல்­களை வழங்­க­வேண்­டி­யுள்­ளது.

அதற்­கான உத்­த­ரவை பிறப்­பிக்­கு­மாறு நான் மன்றைக் கோரு­கிறேன்.

அத்­துடன் எமது விசா­ர­ணை­களை அடுத்த கட்­டத்தை நோக்கி நகர்த்த இலங்கை மருத்­துவ சபை­யினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள, வஸீமின் முதல் பிரேத அறிக்கை குறித்­தான விசா­ர­ணை­களின் தன்­மையை அறி­வது அவ­சியம். எனவே அது குறித்த அறிக்­கையை எமக்கு வழங்­கவும் உத்­த­ர­விட வேண்டும்.

அத்­துடன் இந்த விசா­ர­ணைகள் மிக சூட்­சு­ம­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதால், கைதா­கி­யுள்ள சந்­தேக நப­ருக்கு பிணை வழங்க வேண்டாம். ஏனெனில் பிணைச் சட்­டதின் 14 ஆவது அத்­தி­யா­யத்தின் பிர­காரம் இவ­ருக்கு பிணை வழங்­கினால் விசா­ர­ணைகள் பாதிக்­கப்­படும். அத்­துடன் பொது­மக்­க­ளி­டையே கொந்­த­ளிப்பும் ஏற்­படும். எனவே பிணை வழங்­கு­வதை எதிர்க்­கிறேன். என்றார்.

இத­னை­ய­டுத்து சந்­தேக நப­ரான பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரே­ராவின் சார்பில் மன்றில் பிர­சன்­ன­மான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ரன தனது தரப்பு நியா­யங்­களை முன் வைத்து பிணை கோரினார்.

எனினும் அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி டிலான் ரத்­நா­யக்க, கோரிக்­கையை எதிர்த்தார்.

சந்­தேக நபர் கொலை சதி­யுடன் தொடர்­பு­பட்­டுள்­ளாரா என விசா­ரணை இடம்­பெறும் போது பிணை வழங்­கினால் அது விசா­ர­ணைக்கு பாதிப்­பாக அமையும் என தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து இலங்கை மருத்­துவ சபை சார்பில் மன்றில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி, நீதி­வா னின் கடந்த ஜன­வரி 7 ஆம் திகதி வழங்­கிய உத்­த­ர­வுக்கு பதி­ல­ளித்தார். வஸீமின் சடலம் மீது முதலில் பிரேத பர்­சோ­தனை செய்த வைத்­தியர் ஆனந்த சம­ர­சே­கர தொடர்­பிலும் அவர் குழு தொடர்­பிலும் மருத்­துவ சபையின் விசா­ர­ணைகள் பூர்த்­தி­ய­டைந்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார்.

அதில் ஆனந்த சம­ர­சே­கர குழு­வி­ன­ரிடம் மேலோட்­ட­மாக பார்க்கும் போதே விச­ரணைக் குரிய விட­யங்கள் தென்­ப­டு­வதால் அவர்­க­ளிடம் ஒழுக்­காற்று விசா­ரணை ஒன்று நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விசாரணை ஜூன் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிவான் நிசாந்த பீரிஸ் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளுக்காக கோரிய கோரிக்கைகளை ஏற்று மொபிடல் நிறுவனத்துக்கு தொலைபேசி வலையமைப்பு தகவல்களை வழங்கவும், வைத்திய சபைக்கு விசாரணை அறிக்கையை சமர்பிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் பொது மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படலாம் என்ற காரணத்தை கருத்தில் கொண்டும் விசாரணைகள் நிறைவு பெறாததை சுட்டிக்காட்டியும் பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்கவின் பிணைக் கோரிக்கையையும் நிராகரித்தார்.

அத்துடன் சந்தேக நபரின் குற்றவியல் சட்டக் கோவையின் 127 ஆவது சரத்துக்கு அமைவாக வாக்கு மூலம் வழங்கத் தயார் என்ற கூற்று தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு அவதானம் செலுத்த வேண்டும் என நீதிவான் அறிவித்தார்.

இதனையடுத்தே இது குறித்த அடுத்த கட்ட விசாரணையை மே 26 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்தி வைத்தார்.

-VV-

LEAVE A REPLY