iPhone 7 Plus தொடர்பாக வெளியான புதிய தகவல்

0
17

625.0.560.350.160.300.053.800.668.160.90அப்பிள் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus எனும் தனது இருபுதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

இவ்வாறிருக்கையில் குறித்த கைப்பேசிகள் தொடர்பான பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

பிந்திய தகவலின்படி iPhone 7 Plus ஆனது இரட்டை பிரதான கமெராக்களைக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் iPhone 7 ஆனது வழமை போன்று ஒரே ஒரு கமெராவினைக் கொண்டதாகவே இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவிர இதுவரை அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்களில் இல்லாதவாறு iPhone 7 Plus கைப்பேசியில் பிரதான நினைவகமாக 3GB RAM உள்ளடக்கப்பட்டிருக்கும்.

இதேவேளை A10 Processor மற்றும் iOS10 இயங்குதளத்தினைக் கொண்டே இவ்விரு கைப்பேசிகளும் செயற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இருந்தும் இத் தகவல்கள் அடுத்த மாதம் இடம்பெறுவுள்ள WWDC 2016 நிகழ்விலேயே உறுதிப்படுத்தப்படும்.

LEAVE A REPLY